Pages

Thursday, April 18, 2013

Basic


Spoken English Basic




  •  Spoken English கற்க நீங்கள் Basic(அடித்தளம்) Basic Strong ஆகா இருந்தால் நீங்கள் அதற்கு மேலே போகும் அனைத்தும் மிகவும் வலுவாக இருக்கும்.
  •  இது முதல் படி என்பதால் நாம் காலை நேரத்தில் இருந்து ஆரம்பிப்போம்.
  • வழக்கத்தில் உள்ள வாய்மொழி வணக்கம் அதாவது இது காலை வேளையில் கூற வேண்டியவை...

1.       good morning Dad !– காலை வணக்கம் அப்பா !
2.       goodmorning Grandpha !- காலை வணக்கம் தாத்தா !
3.       goodmorning Sir ! – காலை வணக்கம் ஐயா !

  • நண்பகல் அல்லது மதிய வேளையில் கூற வேண்டிய வார்த்தைகள் மேற்கண்டவற்றில் goodmorning பதிலாக goodAfterNoon சேர்க்க வேண்டும்.



  • (இதில் நாம் கற்கும் போது தான் இந்த goodmorning அதாவது நாம் மற்றவர்களிடம் கூறும் போது தான் good என்ற வார்த்தை சேர்த்து கூற வேண்டும். மற்றவர்களிடம் எதிர்த்து கூறும் போது Morning அல்லது afnoon மட்டும் கூறினால் போதும்).



  • இதே போலதான் இரவு வேலைகளிலும் goodnight என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும். இது ஆரம்பம் என்பதால் இந்தமாதிரி தான் கூற வேண்டி உள்ளது. அனால் இந்த மாதிரி அடிக்கடி நீங்கள் பயன்படுத்துவீர்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


  • (வழக்கமாக பயன்படுத்தும் முக்கியமான வார்த்தைகள்: Hi, Hello, How are You, Bye, Pardon, Sorry, No Mention, Excuse Me, Thanks, Allow Me, Kindly, It’s My Pleasure, Etc..)
  • மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் எப்பவுமே மறக்க கூடாது இதெல்லாம் முகவும் மிக முக்கியமானவை.


  • ஆங்கிலத்தில் சில உபசார முறைகள்(Good Manners in English)
  • இது ஆங்கிலத்தின் நீங்கள் மிகவும் முக்கியமாக ஒன்று அதாவது நீங்கள் தமிழில் எவ்வாறு மரியாதை கொடுக்கிறோமோ அதே போல ஆங்கிலத்தில் நாம் மரியாதை கூற வேண்டும். உங்கள் பேச்சில் இது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  •  மரியாதையான வார்த்தைகளை உங்களுக்கு கூற தேவை இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் ஒரு சில வார்த்தைகளை கூறுகிறேன்.
  •  யாரவது இரண்டு பேர் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவில் செல்ல Excuse-Me என்று கூறி விட்டு செல்ல வேண்டும்.
  •   நீங்கள் அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு தும்மல் வந்தாலோ அல்லது விக்கல் வந்தாலோ மேற்கண்ட வார்த்தையே நீங்கள் பயன்படுத்தலாம்.
  •   யாரவது பேசும் போது உங்களுக்கு புரியவில்லை எனில் நீங்கள் pardon அல்லது Sorry என்ற வார்த்தை பயன்படுத்த வேடும் இது பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படங்களில் வரும் வார்த்தை போல தான்.
  •  இதே போல பல வார்த்தைகள் உள்ளன இதனை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் இதனை பயன்படுத்த வேண்டும்.

சில எடுத்துக்காட்டுகள்
1.       Please      2. Thanks    3. Welcome     4. Allow Me    5. Pardon   6. After You
7. Welcome   8. Sorry 9. That is All Right. 10. Kindly 11. It’s My Pleasure    Etc

Exclamation


Exclamation:




  • ஆங்கிலத்தின் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நீங்கள் வெளியே சொல்லும் வார்த்தைகள் தான் Exclamation என்கிறோம். சந்தோஷம், ஆச்சரியம், கோபம் மற்றும் பிற பாவனைகள் சின்ன சின்ன வாக்கியமாக கூற உதவுவது Exclamation பயன்படுகிறது.
1.     Marvelous!         -     ஓஹோ! ஆஹா !
2       Welldone!          -   சபாஷ்
3.       Beautiful!           -   என்ன அழகு
4.       Hey!                    -   ஏய் !         
5.       Wow!                 -   அடடே!
6.        Oh My God!     -   அட கடவுளே
7.        Wonderful !  -   பிரமாதம்
8.       Of Course !   -   சந்தேகமில்லாமல்
9.       Thank God    -   நன்றி கடவுளே
10.   By God’s Grace கடவுள் அருளால்
11.   May God bless You கடவுள் ஆசி உனக்கு எப்பவும் இருக்கும்
12.   Same To You     -  உனக்கும் அப்படியே
13.   Excellent       -  மிகவும் சிறப்பு
14.   How Sad       -  அட பாவமே  
15.   This is a Good News மிகவும் நல்ல செய்தி
16.   What a great victory என்ன பிரமாதமான வெற்றி
17.   Good Heavens      - அட தெய்வமே !
18.    Hurry up Please    - சீக்கிரம்
19.   Hello Listen       -  கொஞ்சம் கேளுங்கள்
20.   How terrible       -  எவ்வளவு பயங்கரம்
21.   How disgraceful      எவ்வளவு மானக்கேடு    
22.   How absurd       - எவ்வளவு மோசம்
23.   How dare he   -    அவனுக்கு என்ன துணிச்சல்
24.   How sweet    -    எவ்வளவு இனிமை
25.   How lovely    -    எவ்வளவு அழகு
26.   How dare you say that அப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம்
27.   Oh dear      -    என் கண்ணே
28.   Hurry up     - சீக்கிரம்
29.   Quiet Please   - அமைதி காக்கவும்
30.   Yes it is       - ஆமாம் அப்படி தான்
31.   Really !            -  உண்மையாகவா  
32.   Is it !                  -  அப்படியா!
33.   Thanks            -  நன்றி
34.   Thank You     - உங்களுக்கு நன்றி
35.   Many Happy Returns of the day – இந்நாள் மீண்டும் மீண்டும் வரட்டும்
36.   Thank God       -  கடவுளுக்கு நன்றி  
37.   Hurrah! I Have Won –  நான் வென்று விட்டேன்
38.   Congratulation    -    நல்வாழ்த்துகள்
39.   For your good Health  - உங்கள் ஆரோக்கியத்திற்காக
40.   What Nonsense     - என்ன அபத்தம்
  •  சாதாரண வார்த்தையில் (,) அல்லது (.) வைக்கும் இடத்தில் ஆச்சரியத்தை வெளிபடுத்தும் வாக்கியத்தில் ஆச்சரியக்குறி வைக்க வேண்டும். இதனை தான் englishல் Exclamanition sign என்கிறோம்
  •  அதே போல ஆச்சரியக்குறி வரும் இடங்களில் அந்த வார்த்தைகளை மிகவும் சப்தமாக கூற வேண்டும். 
  •   சாதாரண வார்த்தையில் (,) அல்லது (.) வைக்கும் இடத்தில் ஆச்சரியத்தை வெளிபடுத்தும் வாக்கியத்தில் ஆச்சரியக்குறி வைக்க வேண்டும். இதனை தான் englishல் Exclamanition sign என்கிறோம்.
  •   அதே போல ஆச்சரியக்குறி வரும் இடங்களில் அந்த வார்த்தைகளை மிகவும் சப்தமாக கூற வேண்டும். 


கீழே உள்ள சில Exclamation வார்த்தைகளை கவனியுங்கள் 
1.   Marvelous!       -   ஓஹோ! ஆஹா !





Introduction


  • நாம் ஆரம்பிக்கும் போது எதை தொடங்கினாலும் கடவுள் நினைத்து ஆரம்பிக்க வேண்டும்
                                                     அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                                                      பகவன் முதற்றே உலகு.
Introduction





  •  வணக்கம் நண்பர்களே. முதலில் உங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.சரி நாம் எதற்காக ஆங்கிலம் பேச வேண்டும் என்று நீனைக்கதிர்கள். இந்த காலத்தில் ஆங்கிலம் தெரியவில்லை எனில் நீங்கள் ஒரு செல்லாத காசு போல் ஆகி விடுவீர்கள். சாதாரணமாக நீங்கள் ஒரு வேலைக்கு நேர்முக தேர்விற்கு சென்றபின் அங்கு நீங்கள் ஆங்கிலம் பேசாமல் தமிழில் பேசினால் உங்களை அவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதனால் நீங்கள் ஆங்கிலம் கற்றே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டு விடுவீர்கள்

  • அதனால் முடிந்த அளவு நீங்கள் பள்ளி காலங்களில் வெகு விரைவாக கற்று கொள்ள வேண்டும் வேண்டும். சரி நாம் பாடத்திற்கு செல்லலாம் நாம் ஆங்கிலம் கற்க வேண்டுமெனில் அதற்கு மிகுந்த பொறுமை வேண்டும் அதாவது நீங்கள் படிப்படியாக தான் கற்க வேண்டும். முதல் படியிலிருந்து கடைசி படிவரை தான் செல்ல வேண்டும் அப்போது தான் நீங்கள் இலக்கண பிழை இன்றி ஆங்கிலத்தை கற்க முடியும். சரி நீங்க ஆங்கிலம் கற்க தயார் ஆகி விட்டிர்களா...

  • முதல் படியாக நாம் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துருக்களை பார்ப்போம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன.



  • A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z





  • சரி இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இதனை பற்றி நாம் பார்க்க வேண்டாம். இனி நாம் நேரடியாக பாடத்திற்கு செல்லலாம். இது வெறும் ஆரம்பம் தான் எனவே நீங்கள் ஆரம்பத்தில் அதிகமாக படித்து சோர்ந்து விட வேண்டாம்.....